உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது.செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் விழிப்பணர்வு ஊர்வலத்தை, செங்கல்பட்டு சப் - கலெக்டர் வளாகத்தில், கலெக்டர் சினேகா, நேற்று துவக்கி வைத்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினார்.இதில், கலால் உதவி ஆணையர் ராஜன்பாபு, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் உதயகுமார், சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இங்கு துவங்கிய பேரணி, ஜி.எஸ்.டி., சாலை வழியாகச் சென்று, செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி அருகில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் மாணவர்கள் உடலை, உள்ளத்தை ஊனப்படுத்தும் போதைப்பொருளை பயன்படுத்தாதே, குடியை ஒழிப்போம், குடும்பத்தை காப்போம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை