உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை நடுவே மெகா பள்ளம் விபத்து அபாயத்தில் பகுதியினர்

சாலை நடுவே மெகா பள்ளம் விபத்து அபாயத்தில் பகுதியினர்

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சியில் 700க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தெருவின் குறுக்கே கொளத்துார் ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாய் மற்றும் சிறு பாலம் உள்ளது.இந்த சிறு பாலத்தின் மீது அமைக்கப்பட்டு உள்ள மேல்தளமூடி உடைந்து பெரியளவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இது தெருவில் விளையாடும் குழந்தைகள், கால்நடைகள் தவறி விழும் நிலையில் உள்ளது.மேலும் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே. இந்த பள்ளத்தை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை