உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முதியவர் மண்டையை உடைத்தோர் கைது

முதியவர் மண்டையை உடைத்தோர் கைது

மறைமலைநகர்:மறைமலைநகர் அடுத்த சாமியார் கேட் பவானியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரகுமான்,52.கடை கடையாக சென்று சாம்பிராணி புகை போடுபவர். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்னை, சைதாப்பேட்டையில் இருந்து உறவினர் இளைஞர் ஒருவர், தெருவில் நின்று சிகரெட் பிடித்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த சூர்யா, 27, என்பவர் இதை தட்டிக் கேட்க, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கு வந்த ரகுமான், சூர்யாவை சமாதானம் செய்து அனுப்பினார்.இதில் சமாதானமடையாத சூர்யா, அதே பகுதியைச் சேர்ந்த தன் நண்பர்களான அஜித்குமார்,27, தினேஷ்,21, உள்ளிட்டோரை அழைத்து வந்து, ரகுமானிடம் சண்டையிட்டு, இரும்பு கம்பியால் அவரது தலையில் தாக்கிவிட்டு, நண்பர்களுடன் தப்பினார்.அக்கம்பக்கத்தினர் ரகுமானை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ், அஜித்குமார், சூர்யா உள்ளிட்ட மூவரையும் கைது, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை