உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாரம்பரிய ஆரோக்கிய உணவு மாணவர்களிடம் விழிப்புணர்வு

பாரம்பரிய ஆரோக்கிய உணவு மாணவர்களிடம் விழிப்புணர்வு

மாமல்லபுரம்:மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களிடம், பாரம்பரிய ஆரோக்கிய உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இப்பள்ளி மாணவ - மாணவியரிடம், நம் மூத்தையர் கால பாரம்பரிய, ஆரோக்கிய உணவு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை, பள்ளி நிர்வாகம் நேற்று நடத்தியது.பேரூராட்சித் தலைவி வளர்மதி, வார்டு உறுப்பினர் வள்ளி ஆகியோர் விருந்தினராக பங்கேற்றனர். மாணவ குழுவினர், சிறுதானியங்கள், பிற தானியங்கள், கீரைகள், மாவு உள்ளிட்டவற்றில் தயாரிக்கப்பட்ட சத்தான உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.அத்தகைய உணவுகளால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள், நாம் அடையும் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. நம் பழங்கால பாரம்பரிய உணவு வகைகளை உண்பதற்கான அவசியம், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகளை தவிர்த்தல் உள்ளிட்டவை குறித்து, தலைமை ஆசிரியர் லதா, விருந்தினர்கள் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை