உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மண்வளம் காப்போம் விழிப்புணர்வு பேரணி

மண்வளம் காப்போம் விழிப்புணர்வு பேரணி

அச்சிறுபாக்கம்:சித்தாமூரில் மண்வளம் காப்போம் குறித்து வேளாண் கல்லுாரி மாணவியர் நேற்று, பேரணி நடத்தினர்.பாபுராயன்பேட்டையில் உள்ள எஸ்.ஆர்.எம் வேளாண்மை கல்லுாரியில், வேளாண்மை இறுதி ஆண்டு மாணவியர், கிராம தங்கள் திட்டத்தின் கீழ், சித்தாமூரில் தங்கி உள்ளனர்.கிராம தங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று, உலக மண் தினத்தையொட்டி மண்வளம் காப்போம் என்ற தலைப்பில், தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரோடு இணைந்து, பேரணி சென்றனர்.பள்ளி வளாகத்தில் தொடங்கி, செய்யூர் நெடுஞ்சாலை வழியாக சரவம்பாக்கம் கிராமத்தில் பேரணி நிறைவு பெற்றது.மண்வளத்தை காத்தால் தான் மனித வளம் சிறக்கும், விவசாயம் மேம்படும், இதனால் அனைவரும் மண்வளத்தை காக்க வேண்டும் என கையில், பாதாகைகள் ஏந்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில், வேளாண் கல்லுாரி மாணவியர் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை