உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உடற்கல்வி பல்கலை மாணவர்களுக்கு சைக்கிள்

உடற்கல்வி பல்கலை மாணவர்களுக்கு சைக்கிள்

செங்கல்பட்டு, தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழக விடுதி மாணவர்களுக்கு, கலெக்டர் அருண்ராஜ் நேற்று, சைக்கிள் வழங்கினார்.தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயிற்சி பெற்றுவரும் மாணவ, மாணவியருக்கு, தேசிய அளவில் 'டிராக்' சைக்கிள் போட்டியில் பங்கேற்க, 'லுாக் டிராக் சைக்கிள்' இல்லாமல் இருந்தது. இதை வாங்கித் தருமாறு, கலெக்டரிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கோரிக்கை வைக்கப்பட்டது.அதன் பின், சமூக பொறுப்பு நிதி 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில், லுாக் டிராக் சைக்கிளை மாணவர்களிடம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் அருண்ராஜ் நேற்று வழங்கி, உரிய முறையில் பராமரித்து பயன்படுத்தி, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தார்.மேலும், பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயிற்சி பெறும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டு உபகரணங்கள் தேவை ஏற்பட்டால் அணுகலாம் என, கலெக்டர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை