உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கழிவுநீர் இணைப்பு விவகாரம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

கழிவுநீர் இணைப்பு விவகாரம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

மாமல்லபுரம்,:மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணியருக்காக, தொல்லியல் துறை சார்பில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் முறையான கழிவுநீர் வெளியேற்றும் கட்டமைப்பு இல்லாததால், சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால், இங்கு வரும் சுற்றுலா வரும் பயணியர், துர்நாற்றத்தால் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, பாதாள சாக்கடை இணைப்பு வழங்குமாறு, பேரூராட்சி நிர்வாகத்திடம், தொல்லியல் துறை அணுகியது. அதற்கான முன்வைப்புத்தொகை செலுத்துமாறு, பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, அத்துறை முன்வைப்பு தொகை செலுத்த ஒப்புதல் தெரிவித்து, அதன் வளாகத்தில் பாதாள சாக்கடை இணைப்பிற்காக, குழாய் பதிக்கும் பணிகளை துவக்கியது.பயணியர் அதிகளவில் குவியும் சூழலில், பாதாள சாக்கடையில், தொல்லியல் வளாக கழிவுநீரை இணைத்தால், திருக்குளத்தெரு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து, தங்கள் பகுதியில் பாதிப்பு ஏற்படலாம் என, அப்பகுதியினர் அச்சமடைந்தனர்.இதை தொடர்ந்து, நேற்று காலை பேரூராட்சி அலுவலகத்தை, அப்பகுதியினர் முற்றுகையிட்டனர். பாதாள சாக்கடையில், தொல்லியல் பகுதி கழிவுநீரை இணைக்க கூடாது என்பதை வலியுறுத்தி, சுகாதார ஆய்வாளர் ரகுபதியிடம் மனு அளித்தனர்.தற்காலிகமாக பணிகளை நிறுத்துவதாகவும், செயல் அலுவலருடன் பரிசீலிப்பதாகவும் கூறியதை அடுத்து கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி