உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடை உரிமையாளரை தாக்கிய பா.ம.க., கவுன்சிலர் சிக்கினார்

கடை உரிமையாளரை தாக்கிய பா.ம.க., கவுன்சிலர் சிக்கினார்

பம்மல்:குரோம்பேட்டை, சாஸ்திரி காலனியைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 34; பொழிச்சலுார், பஜனை கோவில் தெருவில், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார்.சில வாரங்களுக்கு முன் இவரது கடை வாசலில், அடையாளம் தெரியாத ஒருவர் 'பைக்'கை நிறுத்தியுள்ளார்.சரண்ராஜ் கடை அருகே, பொழிச்சலுார் 8வது வார்டு பா.ம.க., கவுன்சிலர் சுரேஷ் என்பவரின் வீடு உள்ளது. வீடு அருகே பைக் நிற்பதை பார்த்த கவுன்சிலர் சுரேஷ், அது சரண்ராஜ் பைக் என நினைத்து தகராறு செய்துள்ளார்.தன் பைக் இல்லையென சரண்ராஜ் கூறியும் சுரேஷ் ஏற்காததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, மாறி மாறி தாக்கிக் கொண்டனர். அப்போது, கவுன்சிலரின் ஆதரவாளர்களும் சரண்ராஜை சரமாரியாக தாக்கி, கடையில் இருந்த பொருட்களை உடைத்ததாக கூறப்படுகிறது.புகாரின்படி, சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, கவுன்சிலர் சுரேஷின் ஆதரவாளர்கள் மூன்று பேரை, அக்., 31ம் தேதி கைது செய்தனர். தலைமறைவாக இருந்த கவுன்சிலர் சுரேஷ், 46, உள்ளிட்ட மூன்று பேரை, நேற்று, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை