உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரி நகராட்சி கமிஷனருக்கு பா.ம.க. சார்பில் கோரிக்கை மனு

கூடுவாஞ்சேரி நகராட்சி கமிஷனருக்கு பா.ம.க. சார்பில் கோரிக்கை மனு

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி பா.ம.க., நகர செயலர் குமார், நகர தலைவர் ஜானகிராமன் ஆகியோர், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி கமிஷனருக்கு கோரிக்கை மனு ஒன்றை நேற்று வழங்கினர்.அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:கூடுவாஞ்சேரி, அம்பேத்கர் நகரில், வாரத்திற்கு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது, தொடர்ந்து, தினமும் குடிநீர் கிடைக்க வேண்டும்.கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் பயணியருக்கு நிழற்குடை அமைக்க வேண்டும். நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் இருந்து, கூடுவாஞ்சேரி காவல் நிலையம் வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலையை ஆக்கிரமித்துள்ள நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும்.கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில், குடிநீர் குழாய் பதிப்பிற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும். மேலும், வார்டு வாரியாக அனைத்து பகுதிகளிலும் குப்பை அகற்ற, நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதை பெற்றுக்கொண்ட நகராட்சி கமிஷனர் தாமோதரன், அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ