மேலும் செய்திகள்
குளிக்க சென்ற மாணவர் மாயம்
16-Dec-2024
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த எல். என். புரம் ஊராட்சிக்குட்பட்ட அரசர் கோவில் கிராமத்தைச்சேர்ந்தவர் ஏழுமலை, 55. இவர், நேற்று முன்தினம், பாலாற்று கரை ஓரம் மாடு மேய்க்க சென்றுள்ளார். மாலை, மேய்ச்சல் முடிந்து, மாடுகள் மட்டும் வீட்டுக்கு வந்துள்ளன. ஏழுமலை, இரவு முழுதும் வீட்டுக்கு வரவில்லை.குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கிராம மக்கள், நேற்று காலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, பாலாறுகரை ஓரத்தில், இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.படாளம் போலீசார், உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
16-Dec-2024