உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மார்ச் 3ல் பிரம்மோற்சவ விழா

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மார்ச் 3ல் பிரம்மோற்சவ விழா

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா, வரும் மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில், கோவில் நகரங்களில் ஒன்றாக திருப்போரூர் விளங்குகிறது.இங்கு அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இக்கோவிலில் நித்ய நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் ஹிந்து பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.இது தவிர கந்த சஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன.அந்த வகையில், 2025ம் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழா, வரும் மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.7ம் தேதி இரவு, பஞ்சமூர்த்தி புறப்பாடுடன் தங்க மயிலில் கந்தபெருமான் வீதி உலா வருகிறார்.பிரதான விழாவான தேர் திருவிழா, பிப்., 9ம் தேதி காலை நடக்கிறது.10ம் தேதி இரவு ஆலத்துார் கிராமத்திற்கு பரிவேட்டை செல்கிறார். 12ம் தேதி இரவு தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.பிப்., 15ம் தேதி காலை, திருக்கல்யாண வைபவத்துடன் பெருவிழா நிறைவடைகிறது.விழாவை முன்னிட்டு, பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை