உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோவில் பூட்டை உடைத்து  வெள்ளி பொருட்கள் திருட்டு

கோவில் பூட்டை உடைத்து  வெள்ளி பொருட்கள் திருட்டு

சூணாம்பேடு:சூணாம்பேடு அருகே, கடுக்கலுார் கிராமத்தில் விநாயகர் கோவில் உள்ளது.நேற்று முன் தினம் மாலை 6.00 மணிக்கு பூஜை முடிந்து , பூசாரி சந்திரசேகர் கோவிலை பூட்டிச் சென்றார். நேற்று காலை 7.30 மணிக்கு வழக்கம்போல கோவிலை திறக்கச் சென்றபோது, வெளிப்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, கோவில் உள்ளே இருந்த 100 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் 10 கிலோ எடையுள்ள பித்தளை பொருட்கள் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து சூணாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை