| ADDED : ஜன 31, 2024 11:01 PM
மாமல்லபுரம் சாலை ஆக்கிரமிப்புகள்
நெரிசலில் தடுமாறும் வாகனங்கள்@@மாமல்லபுரத்தில், ஐந்து ரதங்கள் சாலை முக்கியமானது. இவ்வழியே, உள்ளூர், சுற்றுலா வாகனங்கள் செல்கின்றன. சாலை மையத்தடுப்புடன் அகலமாக இருந்தாலும், ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.சாலை மைய பகுதி வரை, ஜல்லிக்கற்கள் குவித்து பரப்பி வைக்கப்பட்டுள்ளதால், நடந்து செல்வோருக்கு இடையூறாக உள்ளது.இருசக்கர வாகனங்கள் ஒதுங்கும்போது, கற்களில் சறுக்கி தடுமாறுகின்றன. ஜல்லிக்கற்கள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை, அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - எஸ்.தயாளன், மாமல்லபுரம்.சூணாம்பேடு - மதுராந்தகம் செல்லும்
சாலையில் விரிசலால் ஆபத்து
சூணாம்பேடு அருகே காவனுார் கிராமத்தில், சூணாம்பேடு - மதுராந்தகம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. காவனுார் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் விரிசல் ஏற்பட்டு, சாலை சேதமடைந்து உள்ளதால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், விபத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - கி.சிவா, சூணாம்பேடு.