உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிய நகராட்சிகளில் கட்டட அனுமதி கட்டணம் மாற்றம்

புதிய நகராட்சிகளில் கட்டட அனுமதி கட்டணம் மாற்றம்

புதிய நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதுார், திருவையாறு பகுதிகளில், கட்டுமான திட்ட அனுமதிக்கான கட்டணங்களை மாற்றி அமைத்து, நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார், தஞ்சை மாவட்டம் திருவையாறு பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் கட்டுமான திட்ட அனுமதி வழங்கும்போது, நகராட்சிகளுக்கான, பிரிவின்படி சதுர அடிக்கு, 70 ரூபாய் வீதம் கட்டட அனுமதி கட்டணம் வசூலிக்கலாம் என, நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவிட்டுள்ளது. இது மட்டுமல்லாது, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பகுதிகளில், அதற்கான கட்டட அனுமதி வழங்கும்போது, புதிய கட்டணங்களை கடைபிடிக்க வேண்டும் என, உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. கடந்த, 2016க்கு முன் அங்கீகாரம் பெறாத மனைகளில், புதிய கட்டடங்கள் கட்ட விண்ணப்பம் வந்தால், அதை வரன்முறைக்குரிய கட்டணங்கள் செலுத்தியதற்கான ரசீது ஆவணங்களை பெற வேண்டும்.அதேபோன்று, காலிமனை வரி, பாதாள சாக்கடை கட்டணங்கள் செலுத்திய ரசீது பெற்ற பிறகே, கட்டட அனுமதி வழங்க வேண்டும் என்றும், நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை