உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நெற்பயிரை நாசம் செய்யும் கால்நடைகள் அம்மனுார் விவசாயிகள் சாலை மறியல்

நெற்பயிரை நாசம் செய்யும் கால்நடைகள் அம்மனுார் விவசாயிகள் சாலை மறியல்

செய்யூர், செய்யூர் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள அம்மனுார், கீழச்சேரி, சுண்டிவாக்கம், விரபோகம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாகும்.இப்பகுதியில் பருவத்திற்கு ஏற்ப சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல், மணிலா, தர்பூசணி உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன.தற்போது சம்பா பருவத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் இரவு நேரத்தில் கால்நடைகள் பயிரிடப்பட்டுள்ள வயல்வெளிகளில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதால், பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும், பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து இரவு நேரத்தில் அம்மனுார் வயல்வெளியில் வடக்கு செய்யூர் பகுதிவாசிகளுக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட மாடுகள், 100 க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் பயிரை நாசம் செய்து வருகிறது.இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் நேற்று காலை 9.30 மணிக்கு வடக்கு செய்யூர் பகுதியில் செய்யூர்-பவுஞ்சூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் சப் -- இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், கால்நடைகள் நாசம் செய்த வயல்வெளிகளை நேரில் பார்வையிட்டு, ஊராட்சி மன்ற தலைவர்கள், கால்நடை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து பேச்சு நடத்தி கால்நடைகளை கட்டுப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளித்தார்.பின் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ