மேலும் செய்திகள்
சிலாவட்டம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
20 hour(s) ago
கோவில் நிலத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க கோரிக்கை
20 hour(s) ago
இன்று இனிதாக ... (04.10.2025) செங்கல்பட்டு
03-Oct-2025
செய்யூர், செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளான முதலியார்குப்பம், ஓதியூர், நயினார்குப்பம், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், சில உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை, முறையாக பராமரிக்காததால், போளூர் - செய்யூர் சாலையில் கால்நடைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.இச்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில், சாலை நடுவே வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக கால்நடைகள் உலா வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.சில நேரங்களில் கால்நடைகள் மீது வாகனம் மோதி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால், இச்சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.சாலைகளில் பராமரிப்பின்றி சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, கலெக்டர் பலமுறை அறிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் உலா வரும் கால்நடைகளின் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
03-Oct-2025