உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி;ஊராட்சி பரப்பளவு அதிகம் குப்பை சேகரிப்பில் திணறல்

செங்கல்பட்டு: புகார் பெட்டி;ஊராட்சி பரப்பளவு அதிகம் குப்பை சேகரிப்பில் திணறல்

ஊராட்சி பரப்பளவு அதிகம் குப்பை சேகரிப்பில் திணறல்

சோழிங்கநல்லுார், பெரும்பாக்கம் ஊராட்சி, 831.96 ஹெக்டேர் பரப்பில் உள்ளது; 12 வார்டுகள் உள்ளன. இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.ஒரு சட்டசபை தொகுதிக்கு இணையான மக்கள் தொகை இருப்பினும், இங்கு, 64 பேர் மட்டுமே துாய்மை பணி உள்ளிட்ட வேலைகளை செய்கின்றனர்.இதனால், வார்டுகள் தோறும் குப்பை அகற்றவும், வீடு வீடாகச் சென்று அவற்றை சேகரிக்கவும் உரிய நேரம் கிடைப்பதில்லை. குறைந்த ஊதியத்தில் மிகுதியாக பணியாற்றுவதால், மனச் சோர்வும் ஏற்படுகிறது.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை அதிகரிப்பதோடு, போதுமான எண்ணிக்கையில் ஊழியர்களையும் நியமிக்க வேண்டும்.-எல்.லலிதா, துாய்மை பணியாளர்,பெரும்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ