உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு :புகார் பெட்டி;சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர் ஊரப்பாக்கத்தில் துர்நாற்றம்

செங்கல்பட்டு :புகார் பெட்டி;சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர் ஊரப்பாக்கத்தில் துர்நாற்றம்

சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர் ஊரப்பாக்கத்தில் துர்நாற்றம்

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, 11வது வார்டுக்கு உட்பட்ட அபிராம் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து, கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது.நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கியிருப்பதால், கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்று நோய் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளது.இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், இப்பகுதிவாசிகள் சாலையில் நடந்து செல்லவே, மிகவும் சிரமம் அடைகின்றனர்.எனவே, தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவு நீரை தடுத்து, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.கன்னிகாபரமேஸ்வரி, ஊரப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை