மேலும் செய்திகள்
பழநியில் வாகன நுழைவுக்கட்டணம் உயர்வு
09-Mar-2025
மாமல்லபுரம்:சென்னை அக்கரை -- மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்களுக்கு, ஏப்., 1ம் தேதி முதல், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு, திருத்திய கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், கிழக்கு கடற்கரை சாலையை பராமரித்து, சுங்க கட்டண சாலையாக நிர்வகிக்கிறது. இத்தடத்தில் கடக்கும் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்க கட்டணம், ஆண்டுதோறும் ஏப்., 1ம் தேதி முதல் உயர்த்தப்படும். கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் காரணமாக, ஏப்ரலில் உயர்த்தப்படாமல், தேர்தல் முடிந்து ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது.தற்போது வழக்கம் போல், ஏப்., 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட்டு, திருத்திய கட்டணம் நடைமுறைக்கு வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, புதிய கட்டணம் நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
கார், ஜீப், மூன்று சக்கர வாகனம் - 50 / 75 / 135 / 1,645 / 2,890இலகுரக வணிக, சரக்கு வாகனங்கள் - 80 / 120 / 220 / 2,660 / 4,665பேருந்து, இரண்டு அச்சு சரக்கு வாகனம் - 165 / 250 / 460 / 5,570 / 9,780சரக்கு வாகனம் - மூன்று அச்சு - 180 / 275 / 500 / 6,080 / 10,670பல அச்சு சரக்கு வாகனம் - 260 / 395 / 720 / 8,740 / 15,335கனரக கட்டுமான வாகனங்கள், 7 மற்றும் அதிக அச்சுகள் - 320 / 480 / 880 / 10,640 / 18,670* உள்ளூர் வணிக வாகனங்கள் மாதாந்திர கட்டணம் - ரூபாயில்சரக்கு ஆட்டோ, டாக்சி, மேக்சி கேப், மூன்று சக்கர வாகனம் - 250இலகு ரக வணிக வாகனம், ஜே.சி.பி., கிரேன் - 320டிரக்ஸ், பல அச்சு வாகனங்கள் - 990பள்ளி பேருந்து - 1,980
09-Mar-2025