உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சென்னை: புகார் பெட்டி;கோவூர்—பரணிபுத்துார் அணுகு சாலை சீரமைக்கப்படுமா?

சென்னை: புகார் பெட்டி;கோவூர்—பரணிபுத்துார் அணுகு சாலை சீரமைக்கப்படுமா?

தாம்பரம்—மதுரவாய் பை பாஸ் சாலையை ஒட்டி கோவூர்—பரணிபுத்துார் அணுகு சாலை உள்ளது. போரூர் — குன்றத்துார் நெடுஞ்சலையையும், முகலிவாக்கம்—மாங்காடு சாலையையும், பரணிபுத்துார்—ஐப்பன்தாங்கல் சாலையையும் இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது.பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் இந்த வழியே அதிகம் செல்கின்றனர்.போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், மணப்பாக்கம் கால்வாய் வழியாக அடையாறு சென்றடையும் வகையில், கோவூர்—பரணிபுத்துார் அணுகுசாலையில் பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு கால்வாய் கட்டப்பட்டது. கால்வாய் கட்டிய பிறகு சாலை அமைக்கவில்லை. இதனால், மழை காலத்தில் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. வெயில் காலத்தில் புழுதி பறக்கிறது. இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும். அன்புக்கரசன், கோவூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை