உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பயன்படுத்த முடியாத பூங்கா கூடுவாஞ்சேரியில் சிறுவர்கள் ஏமாற்றம்

பயன்படுத்த முடியாத பூங்கா கூடுவாஞ்சேரியில் சிறுவர்கள் ஏமாற்றம்

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, 27வது வார்டுக்கு உட்பட்ட கே.கே., நகர் பகுதியில், பூங்கா உள்ளது. இதில் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி மேற்கொள்ளும் நடைபாதை உள்ளிட்டவை சேதமடைந்து உள்ளன.மேலும், இந்த சிறுவர் பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி, தற்போது செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால், பூங்காவிற்கு வரும் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.இந்த பூங்காவை சீரமைத்து, சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள், நடைபயிற்சி பாதையைச் சுற்றி சுற்றுச்சுவர், மின் விளக்குகள் அமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இந்த கோரிக்கைக்கு இதுவரை நடவடிக்கை இல்லை. நகராட்சி தலைவர் கார்த்திக், கமிஷனர் ராணி ஆகியோருக்கு கோரிக்கை மனுக்கள் சென்ற நிலையில், நகராட்சி சார்பில் பூங்காவை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.ஆனால், இதுவரை பூங்காவை சீரமைப்பதற்கான பணிகள் துவக்கப்படவில்லை. எனவே, நகராட்சி நிர்வாகம் விரைவில் பூங்காவை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை