உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிட்பண்டு உரிமையாளருக்கு 2 ஆண்டு சிறை

சிட்பண்டு உரிமையாளருக்கு 2 ஆண்டு சிறை

செங்கல்பட்டு:சீட்டு பணம் தராமல் ஏமாற்றிய, தனியார் சிட்பண்டு உரிமையாளருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு கோர்ட், நேற்று தீர்ப்பளித்தது.கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த வேலாயுதம் மற்றும் மூன்று பேர், திருப்போரூர் அடுத்த படூரைச் சேர்ந்த பஞ்சாட்சரம், 45, என்பவர் நடத்திய, அங்காள பரமேஸ்வரி சிட்பண்டு நிறுவனத்தில், 2016ம் ஆண்டு, சீட்டு பணம் கட்டி வந்தனர்.கடந்த 2017ம் ஆண்டு, சிட்பண்ட் நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது. அதன்பின், பஞ்சாட்சரம் என்பவரிடம் சீட்டு பணமாக கட்டிய, 56 லட்சத்து 31 ஆயிரத்து 800 ரூபாயை, வேலாயுதம் கேட்டுள்ளார். ஆனால், அவர் தரமறுத்துள்ளார்.இதுகுறித்து, வேலாயுதம் அளித்த புகாரையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட பொருளாதார குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, பஞ்சாட்சரத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார்.வழக்கு விசாரணை முடிந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பஞ்சாட்சரத்துக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஜெயஸ்ரீ நேற்று தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ