செய்யூரில் கல்லுாரி கனவு நிகழ்ச்சி
செய்யூர்:செய்யூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் - 2 முடித்த பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து ஆலோசனை வழங்கும், 'கல்லுாரி கனவு' திட்ட நிகழ்ச்சி, நேற்று நடந்தது.செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், உயர்கல்வியின் முக்கியத்துவம் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி மாணவர்களிடையே எடுத்துரைக்கப்பட்டது.மேலும், கல்விக் கடன் சார்ந்த விபரங்கள், விருப்பமான கல்லுாரியையும், பாடப் பிரிவையும் தேர்ந்தெடுப்பது எப்படி, வேலை வாய்ப்பு, போட்டித் தேர்வு உள்ளிட்டவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.இதில், செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.