உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த சின்ன காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பொன்னையன் மகள் ரம்யா, 18.இவர், செங்கல்பட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்நிலையில், கடந்த ஜன., 2ம் தேதி மாலை, வீட்டில் இருந்து வெளியே ஜெராக்ஸ் எடுக்க சென்று வருவதாக, பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற ரம்யா, மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், மதுராந்தகம் காவல் நிலையத்தில், ரம்யாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.இதுகுறித்து, வழக்கு பதிந்த மதுராந்தகம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்