மேலும் செய்திகள்
காட்டாங்கொளத்துாரில் நுாலகம் அமைக்க பூமி பூஜை
2 minutes ago
இன்று இனிதாக ... (24.12.2025) செங்கல்பட்டு
3 minutes ago
திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவில் நகரங்களில் ஒன்றாக திருப்போரூர் விளங்குகிறது. இங்கு, அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதமாக, மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இக்கோவிலில் நித்ய நான்குகால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் ஹிந்து பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதுதவிர கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன.அந்த வகையில், 2024ம் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழா, வரும் 15ம் தேதி காலை 4:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 19ம் தேதி இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடுடன் தங்க மயிலில் கந்தபெருமான் வீதி உலா வருகிறார்.பிரதான விழாவான தேர் திருவிழா, 21ம் தேதி காலை 9:00 மணிக்கு துவங்குகிறது. 22ம் தேதி இரவு ஆலத்துார் கிராமத்திற்கு பரிவேட்டை செல்கிறார். 27ம் தேதி காலை 8:00 மணிக்கு திருக்கல்யாண வைபவத்துடன் நிறைவடைகிறது.இதற்கான முன்னேற்பாடு பணி நடந்து வருகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
2 minutes ago
3 minutes ago