உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காயலான் கடைகாரரை தாக்கிய ஊராட்சி தலைவர் மீது புகார்

காயலான் கடைகாரரை தாக்கிய ஊராட்சி தலைவர் மீது புகார்

சேலையூர்:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரைச் சேர்ந்தவர் கணேசன், 44. சிட்லப்பாக்கத்தில் தங்கி, சேலையூர் அடுத்த அகரம்தென் பகுதியில், ஏழு ஆண்டுகளாக பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் காயலான் கடையை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் மதியம், இவரது கடைக்கு சென்ற தி.மு.க.,வைச் சேர்ந்த அகரம்தென் ஊராட்சி தலைவர் ஜெகன், 45, கடையில் இருந்து, 10 இரும்பு குழாய்களை எடுத்துள்ளார். அப்போது, கடை உரிமையாளர் கணேசன், 'ஏற்கனவே ஐந்து மாதங்களுக்கு முன் எடுத்து சென்ற பொருட்களுக்கு, 7,500 ரூபாய் பணம் தரவில்லை' என, கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ஜெகன், ''கடையை இழுத்து மூடிவிடுவேன்; எப்படி கடை நடத்துகிறாய் என்று பார்ப்போம்,'' எனக்கூறி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.காயமடைந்த கணேசன், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். கணேசன் கொடுத்த புகாரில், சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை