| ADDED : பிப் 22, 2024 01:24 AM
செங்கல்பட்டு:மாமல்லபுரத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக, 5 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்ட பெண்கள், எஸ்.பி.,யிடம், மனு அளித்தனர்.செங்கல்பட்டு எஸ்.பி., சாய் பிரணீத்திடம், பணத்தை இழந்த பெண்கள் அளித்த மனு விபரம்:மால்லபுரம் அடுத்த பட்டிப்புலம் மீனவர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 50. அவரது மனைவி துளசி, 42. இவர்கள் இருவரும், சுற்றுப்புற பகுதி மற்றும் சென்னையைச் சேர்ந்த பெண்களிடம், தங்களிடம் பணம் கொடுத்தால், அதை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பணம் பெற்றனர். சென்னை நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த சுதாகர் மனைவி நித்யா, 35 என்பவர், தன் தங்கை மைதிலி மூலம், 2021ல் 25 பெண்களிடம், 5 கோடி ரூபாய் வரை வசூலித்து, ராஜா, துளசி தம்பதியிடம் அளித்தனர். ஆனால் சொன்னபடி, பணத்தை அளிக்காமல் ஏமாற்றி உள்ளனர். பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட எஸ்.பி., 'பண மோசடி தொடர்பாக, ராஜா என்பவரை கைது செய்துள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது' என்றார்.