மேலும் செய்திகள்
குழந்தைகள் கல்வி கற்க அங்கன்வாடிக்கு அனுப்புங்க
09-Jun-2025
திருப்போரூர்:திருப்போரூரில், அங்கன்வாடிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தாமதமாவதால், அதிருப்தி நிலவுகிறது.திருப்போரூர் மலைக்கோவில் அடிவாரம் அருகே, அடுத்தடுத்து இரண்டு அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில், 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர்.இந்த அங்கன்வாடி மையங்கள் உள்ள வளாகம் சுற்றுச்சுவரின்றி, திறந்தவெளியாக உள்ளது.இதனால், மது பிரியர்கள் இங்கு அமர்ந்து குடித்துவிட்டு, காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசிவிட்டுச் செல்கின்றனர்.அங்கன்வாடி ஊழியர்கள் பணிக்கு வந்ததும், மது பாட்டில்களை அப்புறப்படுத்துவதே தினசரி பணியாக உள்ளது. அத்துடன், கால்நடைகளும் இந்த வளாகத்தில் நுழைவதால், இடையூறாக உள்ளது. மேலும், சாலையை ஒட்டி அங்கன்வாடிகள் அமைந்துள்ளதால், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.எனவே, அங்கன்வாடி மைய வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுச்சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான முதற்கட்ட பணியாக பள்ளம் எடுக்கப்பட்டது. ஆனால், இரண்டு மாதங்கள் ஆகியும், இன்னும் அடுத்தகட்ட பணிகள் துவக்கப்படவில்லை. எனவே, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:அங்கன்வாடி மையம் நுழைவாயிலை ஒட்டி, கான்கிரீட் வடிகால்வாய் உள்ளது. இங்கு ஒரு இடத்தில் மூடி இல்லாமல், கால்வாய் திறந்த நிலையில் உள்ளதால், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. திறந்து கிடக்கும் கால்வாயில், குழந்தைகள் விழ வாய்ப்புள்ளது. கால்வாய்க்கு மேல் மூடி அமைக்க வேண்டும். அங்கன்வாடி மையத்திற்கு தேவையான குடிநீரை சேமித்து வைக்கும் வகையில், வளாகத்தில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், தண்ணீர் நிரப்பப்படுவது இல்லை. அங்கன்வாடி மையத்திற்கு குடிநீர் குழாய் இணைப்பு வாயிலாக, முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
09-Jun-2025