உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.1.50 லட்சம் காப்பர் கம்பி திருட்டு

ரூ.1.50 லட்சம் காப்பர் கம்பி திருட்டு

படப்பை:வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், படப்பை அருகே ஆரம்பாக்கம் கூட்டுச்சாலை பகுதியில் 'பாலாஜி பவர்' என்ற பெயரில் மின்சாதன பொருட்கள் தயாரிக்கும் கடை உள்ளது.நேற்று கடையை திறக்க ஊழியர்கள் சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் 'ஹார்ட் டிஸ்க்'கையும் மர்ம நபர்கள் எடுத்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ