உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையின் நடுவே விரிசல் வாகன ஓட்டிகள் திக்... திக்

சாலையின் நடுவே விரிசல் வாகன ஓட்டிகள் திக்... திக்

அச்சிறுபாக்கம்: தொழுப்பேட்டில் இருந்து ஒரத்தி வழியாக வந்தவாசி மற்றும் திண்டிவனம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.இதில், தொழுப்பேடு- - ஒரத்தி மாநில நெடுஞ்சாலையில், தனியார் வேளாண் கல்லுாரி பேருந்து பயணியர் நிறுத்தத்தில் இருந்து, கீழ்அத்திவாக்கம் நிறுத்தம் வரை உள்ள, 1 கிலோமீட்டர் வரையிலான சாலை, விரிசல் ஏற்பட்டு உள்ளது.இந்த பகுதியில் மிகவும் மோசமான நிலையில் சாலை உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அரசு, தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.மேலும், சாலையில் லோடு ஏற்றிச் செல்லும் கனரக வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இந்த குறிப்பிட்ட பகுதியில், ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலையில், சாலை மிகவும் மேடுபள்ளமாக உள்ளது. சாலையில் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், குறிப்பிட்ட பகுதியில் உள்ள சாலையில், தொடர்ந்து விரிசல் மற்றும் மேடுபள்ளமாக உள்ளதால், நிரந்தர தீர்வாக சிமென்ட் கான்கிரீட் கலவை கொண்டு சாலை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை