மேலும் செய்திகள்
சேதமான மின் கம்பத்தால் தொடரும் விபத்து அபாயம்
18-Feb-2025
மக்களுக்காக போராடினால் கைது தான் திமுக முடிவா?
18-Mar-2025
அதிமுகவுக்கு இந்த மாதிரியான வியூகம் தேவை!
03-Mar-2025
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் ஊராட்சியில், கேளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு மின் கம்பம், அடிப்பகுதியில் முற்றிலுமாக சிமென்ட் பூச்சு உதிர்ந்து, கம்பிகள் வெளியில் தெரியும் வகையில் உள்ளது.இந்த மின் கம்பம் அமைந்துள்ள சாலை, ஆறுவழிச்சாலை மற்றும் கோவளம் சாலையை இணைக்கும் முக்கிய உள்சாலையாக உள்ளது.இச்சாலையில், கேளம்பாக்கம் பேருந்து நிலையம், பல குடியிருப்புகள், வணிக கடைகள், தேவாலயம், கல்வி நிறுவனம், மருத்துவ மையம் உள்ளிட்டவை உள்ளது. தினமும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என, ஏராளமானோர் சென்று வருகின்றனர்.இந்நிலையில், மின் கம்பம் எந்நேரமும் முறிந்து விழும் நிலையில் உள்ளதால், அந்த வழியாக செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர்.எனவே மின் துறை அதிகாரிகள், சேதமடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18-Feb-2025
18-Mar-2025
03-Mar-2025