உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாம்பரம் மேம்பாலத்தில் தொங்கும் கேபிள்களால் விபத்து அபாயம்

தாம்பரம் மேம்பாலத்தில் தொங்கும் கேபிள்களால் விபத்து அபாயம்

தாம்பரம்:தாம்பரத்தில், முடிச்சூர் - ஜி.எஸ்.டி., - வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில், மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.இம்மேம்பாலத்தை, தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துகின்றன. அதிக போக்குவரத்து கொண்ட முக்கியமான மேம்பால மின் கம்பங்களில், ஏகப்பட்ட தனியார் வடங்கள் கட்டப்பட்டுள்ளன.ஒவ்வொரு கம்பத்திலும், 10, 20 வடங்கள் கட்டப்பட்டு, வரைமுறையின்றி தொங்கிக் கொண்டிருக்கின்றன.கம்பங்களில், வடங்களை மொத்தமாக சுற்றி, அதையும் கட்டி வைத்துள்ளனர். குறுக்கும், நெடுக்கமாக தொங்கும் வடங்கள், காற்று அடித்தாலோ, மழை பெய்தாலோ அறுந்து, மேம்பாலத்தின் மீதும், ஜி.எஸ்.டி., சாலையிலும் விழுகின்றன.அதுபோன்ற நேரங்களில், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், வடத்தில் சிக்கி, கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.அவை அடிக்கடி அறுந்து விழுவதாலும், காற்றில் தொங்குவதாலும், மேம்பாலத்தின் மீது செல்லும் வாகன ஓட்டிகளின் உயிருக்கு உத்ரவாதம் இல்லாத சூழல் நிலவுகிறது.அப்படியிருந்தும், இதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனை அளிக்கிறது.வடம் அறுந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்ட பின் நடவடிக்கை எடுப்பதால் பயனில்லை. மேம்பால மின் கம்பங்களில் தனியார் வடங்கள் கட்ட, போலீசாரிடமும் மாநகராட்சி நிர்வாகத்திடமும் அனுமதி பெறப்பட்டதா என்பதும் தெரியவில்லை.தாம்பரம் மாநகராட்சி - போக்குவரத்து போலீஸ் - நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து, மின் கம்பங்களில் ஆபத்தான முறையில் கட்டப்பட்டு, தொங்கிக் கொண்டிருக்கும் வடங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி