மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 4.5 சவரன் நகை திருட்டு
2 hour(s) ago
ஊஞ்சல் உத்சவம்
2 hour(s) ago
வட மாநில வாலிபரை தாக்கி பணம் பறித்தவர் கைது
2 hour(s) ago
இன்று இனிதாக (நாள்/31/12/2025/புதன்)
2 hour(s) ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில் நிலங்களுக்கு, எல்லை கற்கள் நடும் பணி அரைகுறையாக விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 1,430 கோவில்கள் உள்ளன. இதில், பல கோவிலுக்கு சொந்தமான விளைநிலங்கள், வீட்டுமனைகள், வணிக கட்டடங்கள் என, பல வித சொத்துக்கள் உள்ளன. பராமரிப்பு இல்லாததால், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி இருந்தன. தி.மு.க., ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கப்படும் என, அறிவித்தார். ஆக்கிரமிப்பு இடங்கள் பல துறை அதிகாரிகளின் உதவியுடன் மீட்கப்பட்டன. துவக்கம் தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள, ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை கணக்கெடுக்கும் பணியை, அமைச்சர் சேகர்பாபு உத்திரமேரூர் தொகுதி திருப்புலிவனம் கிராமத்தில், 2022ம் ஆண்டு துவக்கி வைத்தார். இந்த நிலங்க ள் அளவீடு செய்வதற்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு, தலா ஒரு தனி தாசில்தார் என, இரு தாசில்தார். இரு தலைமை இடத்து சர்வேயர் என, இருவர். மூன்று குழுக்களுக்கு ஆறு சர் வேயர்கள், ஆறு உதவியாளர்கள் என, 16 நபர்களை நியமித்து உள்ளனர். இவர்கள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை கண்டறிந்து வரை படங்கள் தயாரித்து, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என, முக்கோண வடிவ எல்லை கற்களை நடும் பணியை துவக்கினர். அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களில், கடந்த வாரம் வரையில், 4,025 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்துள்ளனர். இதில், 3,000 ஏக்கருக்கு மேல் கற்கள் நட்டுள்ளனர். 1,000 ஏக்கருக்கு மேல் எல்லை கற்கள் நடும் பணி நடக்க வில்லை. இந்த நிலம், தற்போது யாரிடம் உள்ளது என, கண்டு பிடிக்க முடியாத நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் பரிதவித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு உதாரணமாக, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான விளை நிலங்கள் புத்தகரம் மற்றும் கள்ளிப்பட்டு ஆகிய கிராமங்களில் விளை நிலம் உள்ளது. இதில், 10 ஏக்கருக்கு மேல் நிலம் யாரிடம் உள்ளது என, தெரியாத அளவிற்கு ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. இதை கண்டு பிடிக்க அறநிலை யத்துறை அதிகாரிகள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 1,000 ஏக்கருக்கு மேல் கற்கள் போடவில்லை என, என, பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் கூறும்போது, 'பெரும்பாலான கோவில் நிலங்க ள் அளவீடு செய்து, கற்கள் நடும் பணி நடந்து வருகிறது' என்றார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago