உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாவட்ட ஆணழகன் போட்டி மாற்றுத் திறனாளி சாம்பியன்

மாவட்ட ஆணழகன் போட்டி மாற்றுத் திறனாளி சாம்பியன்

சென்னை, : திருவள்ளூர் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில், ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர், நடனமாடியபடி கட்டுடலைக் காட்டி அசத்தினார்.திருவள்ளூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்பகுதி சங்கம் மற்றும் தி.மு.க., வடகிழக்கு மாதவரம் வடக்கு பகுதி சார்பில், மாவட்ட ஆணழகன் போட்டி, வடபெரும்பாக்கத்தில் நடந்தது.இதில் ஜூனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் மாற்றுத்திறனாளி என, தனித்தனியாக மொத்தம் 15 எடை பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி பகுதிகளில் இருந்து, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவில், ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த குறைந்த உயரம் கொண்ட பூமிநாதன், 26, என்பவர் பங்கேற்றார்.இவர், சினிமா பாடலுக்கு நடனமாடியபடி கட்டுடலைக் காட்டி, பார்வையாளர்களை வியக்க வைத்து, ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தை வென்று அசத்தினார். தவிர, மற்ற பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி