உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பாலுார் அரசு பள்ளியில் போதை விழிப்புணர்வு

 பாலுார் அரசு பள்ளியில் போதை விழிப்புணர்வு

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் ஊராட்சியில், ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், செங்கல்பட்டு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சார்பில், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடந்தது. மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், போதையின் பாதிப்புகள் குறித்து விளக்கி, ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -- மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். இதில், பள்ளி தலைமையாசிரியர் காமராஜ், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ