உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போதையில் காரில் துாங்கியவர் பலி

போதையில் காரில் துாங்கியவர் பலி

தாம்பரம்:காரில் போதையில் துாங்கியவர் இறந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.திருநெல்வேலி மாவட்டம், சிந்து பூந்துரையைச் சேர்ந்தவர் பெரியதுரை, 39. இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.பெரியதுரை சென்னையில் தங்கி, சிட்டிபாபு என்பவரின் காரை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு, மேற்கு தாம்பரம், சி.டி.ஓ., காலனி அருகே காரை நிறுத்திவிட்டு, போதையில் காரில் துாங்கியுள்ளார்.இந்நிலையில், கார் உரிமையாளர் சிட்டிபாபு பல முறை போன் செய்தும், பெரியதுரை அழைப்பை எடுக்கவில்லை. சந்தேகமடைந்த அவர், தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்படி, காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.ஆர்.எஸ்., கருவி வாயிலாக, கார் இருக்கும் இடத்தை கண்டறிந்து, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தனர்.அப்போது, பெரியதுரை மயங்கி நிலையில் கிடந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு, பரிசோதனை செய்ததில், அவர் இறந்தது தெரிந்தது. இது குறித்து தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ