மேலும் செய்திகள்
ஸ்கூட்டர் விபத்து முதியவர் பலி
02-Jan-2025
செங்கல்பட்டு:காஞ்சிபுரம் கவரத் தெருவைச் சேர்ந்தவர் சாந்தகுமார், 55. இவர், தன் மனைவி ருக்மணி பாய்,54, என்பவரை, சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்.நேற்று முன்தினம் காலை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் உள்ள உணவகத்திற்கு சாப்பிடச் சென்றார்.அப்போது, செங்கல்பட்டு பழைய ஜி.எஸ்.டி., சாலையைக் கடக்க முயன்ற போது, மதுராந்தகத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத பைக், சாந்தகுமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.அங்கிருந்தோர் சாந்தகுமாரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.இந்நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
02-Jan-2025