உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நெல்லிக்குப்பம் சாலையில் ஆபத்தான நிலையில் மின்கம்பம்

நெல்லிக்குப்பம் சாலையில் ஆபத்தான நிலையில் மின்கம்பம்

கூடுவாஞ்சேரி:நெல்லிக்குப்பம் சாலை கோவிந்தராஜபுரத்தில், மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, நெல்லிக்குப்பம் சாலை கோவிந்தராஜபுரத்தில், தனியார் பள்ளி அருகில், நடைபாதையில் மிகவும் ஆபத்தான நிலையில் மின் கம்பம் உள்ளது.இந்த மின் கம்பம் சேதமாகவும், உயரம் சிறியதாகவும், அதில் உள்ள மின் கம்பிகள் சாலையில் செல்வோர் தொட்டுவிடும் துாரத்தில் இருப்பதால், எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, இந்த மின் கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை