உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகத்தில் மின் விளக்குகள் பழுது இருளில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை

மதுராந்தகத்தில் மின் விளக்குகள் பழுது இருளில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை

மதுராந்தகம்,:மதுராந்தகம் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் மையத் தடுப்பு பகுதியில் அமைக்கப்பட்ட மின் விளக்குகள் எரியாததால், சாலை பகுதி இருளில் மூழ்கியுள்ளது.மதுராந்தகம் வடக்கு பைபாஸ் முதல் அய்யனார் கோவில் சந்திப்பு வரை, வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகமுள்ளதால், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சார்பில், மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டன.இரவிலும் பகல் போல ஒளிர்ந்த மின் விளக்குகளால், கனரக வாகன ஓட்டுனர்கள், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், அப்பகுதியை கடந்து செல்லும் மக்கள், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், இரவில் அச்சமின்றி இருந்தனர்.இந்நிலையில், சில தினங்களாக மின் விளக்குகள் எரிய விடப்படவில்லை. அதனால், மதுராந்தகம் வடக்கு பைபாஸ் பகுதியில் இருந்து மதுராந்தகம் டவுன் பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் மதுராந்தகம் ஏரிக்கரையின் மீது இரு மார்க்கத்திலும் பேருந்து நிழற்குடையில் காத்திருக்கும் பயணியர், மின் விளக்குகள் எரியாததால் இருளில் அவதிப்படுகின்றனர்.அப்பகுதி முழுதும் போதுமான வெளிச்சம் இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட மின் விளக்குகள், உபயோகமின்றி வீணாகி வருகின்றன.எதிர் வரும் பண்டிகை காலங்களை ஒட்டி, பொதுமக்களின் நலன் கருதி, பழுதான மின் விளக்குகளி சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை