உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எலப்பாக்கம் துணை மின் நிலையத்திற்கு புதிய கட்டடம் அமைக்க எதிர்பார்ப்பு

எலப்பாக்கம் துணை மின் நிலையத்திற்கு புதிய கட்டடம் அமைக்க எதிர்பார்ப்பு

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த ராமாபுரத்தில், 33 கே.வி., துணை மின் நிலையம் அமைந்துள்ளது.இங்கிருந்து, எலப்பாக்கம், ராமாபுரம், அம்மனுார், பொற்பனங்கரணை, வேலாமூர், மதுார், கல்லியங்குணம், ஆணைக்குன்றம், ரெட்டியார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.இதில், 1,000த்திற்கும் மேற்பட்ட மின் மோட்டார் இணைப்புகளும், 8,000த்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.ராமாபுரம் துணை மின் நிலையத்திற்கு, சொந்தமாக கட்டடம் அமைக்கப்படவில்லை. இதனால், எலப்பாக்கம் ஊராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது.அந்தக் கட்டடமும் பழமையானதால், தற்போது ஊராட்சி இ -- சேவை மைய கட்டடத்தில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.இதனால், போதிய அளவு இட வசதி இல்லாததால், மின்சாதன பொருட்கள், கணினி மற்றும் துணை மின் நிலைய ஆவணங்களை பாதுகாப்பதில், அதிகாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.எனவே, பயன்பாடு இன்றி உள்ள பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, அதே பகுதியில் நிரந்தர கட்டடம் அமைத்து தர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி