உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சூணாம்பேடு பஜார் வீதியை விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு

சூணாம்பேடு பஜார் வீதியை விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு

சூணாம்பேடு : நெரிசல் மிகுந்த சூனாம்பேடு பஜார் வீதியை விரிவாக்கம் செய்ய வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.சூணாம்பேடு ஊராட்சியின் மையப்பகுதியில், பஜார் பகுதி உள்ளது.இங்கு காவல் நிலையம், ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அஞ்சலகம், பேருந்து நிறுத்தம், பள்ளி, வங்கி போன்றவை செயல்படுகின்றன.மேலும், 50க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன.இதனால், சூணாம்பேடு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள், தினமும் பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.தற்போது அமைக்கப்பட்டுள்ள தார் சாலையின் மொத்த அகலம், 23 அடி மட்டுமே உள்ளதால் கார், வேன், பேருந்து, லாரி ஆகிய வாகனங்கள் சென்றுவர கடினமாக உள்ளது.முன்னே செல்லும் வாகனங்களை முந்த முயற்சிக்கும்போது, விபத்துகள் ஏற்படுகின்றன.மேலும், பஜார் வீதிக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை, சாலையில் தாறுமாறாக நிறுத்துவதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையை அளவீடு செய்து, சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி