உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பழுதடைந்த கட்டடங்களை இடித்து அகற்ற எதிர்பார்ப்பு

பழுதடைந்த கட்டடங்களை இடித்து அகற்ற எதிர்பார்ப்பு

சித்தாமூர்:சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண் அலுவலகம், குழந்தைகள் நல அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.இந்த வளாகத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கிடங்குகள், பயன்பாடின்றி பழுதடைந்து உள்ளன.இந்த கட்டடங்கள் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் வாழ்விடமாக மாறி வருகின்றன.இதனால் அப்பகுதியில் செயல்படும் மாணவியர் விடுதியில் பயிலும் மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் பயன்பாடின்றி பழுதடைந்துள்ள கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை