உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் துவக்க எதிர்பார்ப்பு

நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் துவக்க எதிர்பார்ப்பு

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆலத்துார் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும், ஆலத்துாரில் உள்ள சிட்கோவில், 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில், 15,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.கொரோனாவுக்கு முன் ஆலத்துார் சிட்கோவிலிருந்து திருப்போரூர், கேளம்பாக்கம், மத்திய கைலாஷ், சைதாப்பேட்டை வழியாக, தி.நகர் வரை, தடம் எண் '519ஏ' மாநகர பேருந்து இயக்கப்பட்டது.கொரோனாவுக்குப் பின், இப்பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என, அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, நிறுத்தப்பட்ட இந்த பேருந்து சேவையை, மீண்டும் துவங்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:ஆலத்துாரிலிருந்து இயக்கப்பட்ட தடம் எண் '519ஏ' பேருந்து, பலருக்கும் உதவியாக இருந்தது. கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.தற்போது பேருந்து நிறுத்தப்பட்டதால், தெரியாதவர்களிடம் 'லிப்ட்' கேட்டு ஒரு கி.மீ., துாரத்திலுள்ள ஆலத்துார் பிரதான சாலை மற்றும் 4 கி.மீ., துாரத்திலுள்ள திருப்போரூர் நகருக்குச் சென்று, மாற்று பேருந்து பிடித்து செல்லும் நிலை உள்ளது.எனவே, நிறுத்தப்பட்ட இந்த பேருந்து மீண்டும் இயக்கப்பட்டால் வசதியாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி