உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நல்லாமூரில் நெற்களம் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

நல்லாமூரில் நெற்களம் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

சித்தாமூர்,சித்தாமூர் அருகே நல்லாமூர் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். பகுதியில், 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல், வேர்க்கடலை மற்றும் தர்பூசணி பயிரிடப்படுகிறது.இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் பயிர்களை உலர்த்த நெற்களம் இல்லை. மேலும், பயிர்களில் இருந்து தானியங்களை பிரித்தெடுக்க, கதிரடிக்கும் களம் வசதியும் இல்லை.இதனால், விவசாயிகள் தங்கள் வயல்வெளியில் விளையும் பயிர்களை, செய்யூர் - போளூர் சாலை ஓரத்தில் உலர்த்துகின்றனர். இதன் காரணமாக, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர்.எனவே, ஊராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து, நல்லாமூர் பகுதியில் நெற்களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை