உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மழையில் வீணான வைக்கோல் விவசாயிகள் கவலை

மழையில் வீணான வைக்கோல் விவசாயிகள் கவலை

மறைமலை நகர்:தொடர் மழையில், வைக்கோல் நனைந்து வீணாகியதால், விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுார், சாஸ்திரம்பாக்கம், கொளத்துார், கொண்டமங்கலம், செட்டிபுண்ணியம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழில். ஆடிப்பட்டம், நவரைப்பட்டம் மற்றும் சொர்ணவாரி பருவங்களில் நெல் பயிரிடப்படுகிறது. சித்திரை, வைகாசி மாதங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களின் அறுவடை துவங்கியுள்ளது. இந்நிலையில், இரண்டு நாட்களாக பெய்த மழையால், விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது; அறுவடை பணிகள் பாதிப்பு அடைந்து உள்ளன. அத்துடன், அறுவடை முடிந்து சேகரிக்கப்பட்ட வைக்கோலும் மழையில் நனைந்து வீணாகி உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: அறுவடை முடிந்து சேகரித்து வைக்கப்பட்டு இருந்த, நுாற்றுக்கணக்கான வைக்கோல் கட்டுகள், மழையில் நனைந்து வீணாகி விட்டன. மழையில் நனையாமல் இருந்து இருந்தால், கட்டு தலா, 100 ரூபாய் என, விற்பனை செய்து இருப்போம். இனி, அது நடக்காது. இந்த ஆண்டு வைக்கோல் விற்பனை பாதிப்பு அடைந்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ