உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மீன் வலைகள் பாதுகாப்பு கூடம் பரமன்கேணி குப்பத்தில் அவசியம்

மீன் வலைகள் பாதுகாப்பு கூடம் பரமன்கேணி குப்பத்தில் அவசியம்

கூவத்துார்:பரமன்கேணி குப்பத்தில் மீனவர்கள் தங்களது வலைகளை பாதுகாப்பாக வைக்க, மீன் வலை பாதுகாப்புக் கூடம் அமைத்து தர வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.கூவத்துார் அடுத்த பரமன்கேணி குப்பம் பகுதியில், 250க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் நாட்டுப்படகு வாயிலாக கடலுக்கு சென்று மீன் பிடித்தல் மற்றும் கடல்சார் உணவுப் பொருட்களை விற்பனை செய்வது இப்பகுதி மக்களின் பிரதான தொழில்.தினமும் 120க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் வாயிலாக, கடலுக்குச் சென்று மீன்பிடிக்கச் செல்கின்றனர்.20 ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் மீன் வலைக்கூடம் அமைக்கப்பட்டது.இதில் 10 முதல் 15 மீனவர்களின் வலைகளை மட்டுமே பாதுகாக்க முடியும். மீதமுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களது வலைகளை, திறந்தவெளியில் வைத்து வருகின்றனர்.மீன் வலைகளை திறந்தவெளியில் வைப்பதால், வெயில் மற்றும் மழையில் நனைந்து விரைவில் மட்கி வலைகள் அறுந்து விடுவதால், மீனவர்களுக்கு அதிக அளவில் பொருட்சேதம் ஏற்படுகிறது.மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில், மீன் வலைகளை கடலுக்குள் இழுத்துச் செல்லும் நிலை உள்ளது.மேலும், வலைபின்னும் கூடம் வசதி இல்லாததால், கிழிந்த வலைகளை பின்ன இடவசதி இல்லாமல், மீனவர்கள் சிரமப்படுகின்றனர்.எனவே, மீன்வளத் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பரமன்கேணிகுப்பம் பகுதியில் மீன் வலை பாதுகாப்பு மையம் மற்றும் மீன் வலை பின்னும் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை