உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / படகு கவிழ்ந்து மீனவர் பலி

படகு கவிழ்ந்து மீனவர் பலி

மாமல்லபுரம், மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலியைச் சேர்ந்தவர் கதிர்வேல், 44; மீனவர்.இவர், அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் படகில், நேற்று காலை 6:00 மணியளவில், சிலருடன் கடலில் மீன் பிடிக்க சென்றார்.அப்போது, திடீரென படகு கவிழ்ந்து, நீரில் விழுந்த கதிர்வேலை உடனிருந்தோர் மீட்டு, கோவளம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.டாக்டர் அவரை பரிசோதித்து, ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை