ஆயுதங்களுடன் சுற்றிய ஐவர் கைது
செங்கல்பட்டு:ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு தாலுகா போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது திம்மாவரம் நடுத்தெரு பகுதியில் ஆறு பேர் கொண்ட கும்பல் கையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தனர். போலீசாரை கண்டு தப்பிச் செல்ல முயன்ற போது அதில் ஐந்து பேரை போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபர்கள், திம்மாவரம் பகுதியை சேர்ந்த சுதாகர், 21. யுவராஜ், 21. மகேஷ் ராஜ், 18. ஹரி, 19. பிரவீன், 21.என்பதும் பாலாற்றில் மண் எடுப்பது தொடர்பாக உள்ளூரில் சிலருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆயுதங்களுடன் சுற்றி வந்தது தெரிந்தது. இதையடுத்து ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.