மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற காதலர்கள் கைது
21-May-2025
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் காவல் எல்லைக்கு உட்பட்ட ராமாபுரம் பகுதியில், கஞ்சா வைத்திருந்த ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். செய்யூர் - வந்தவாசி மாநில நெடுஞ்சாலையில், மேல்மருவத்துார் போலீசார், ராமாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில், பஜாஜ் சிடி 100, டிவிஎஸ் அப்பாச்சி இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த ஐந்து பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் ராமாபுரம் அடுத்த பாதிரி கிராமத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம், 25, சந்திர பிரகாஷ், 26, கௌதம், 19, இளவரசன், 25, மற்றும் சுனில் குமார், 18 என தெரிந்தது. அவர்களிடம் இருந்த 170 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார், இரண்டு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
21-May-2025