| ADDED : பிப் 13, 2024 04:07 AM
சென்னை, : சென்னை, மதுரவாயல், ஆலப்பாக்கம் கங்கையம்மன் 10வது தெருவைச் சேர்ந்தவர் பூவரசன், 35; மதுரவாயல் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று காலை சாதாரண உடையில், வீட்டில் இருந்து காவல் நிலையத்திற்கு ஸ்கூட்டரில் சென்றார்.அப்போது, வானகரம் வழியாகச் சென்ற போது, வானகரம் சர்வீஸ் சாலையில் எதிர்புறமாக, 'பைக்'கில் வேகமாக வந்த மர்ம நபர்,'வண்டியை நிறுத்துடா' என, சத்தம் போட்டு விட்டுச் சென்றுள்ளார்.பூவரசன் அந்த நபரை பின்தொடர்ந்து சென்று, வானகரம் வேம்பூலியம்மன் சிக்னல் அருகே மடக்கி, ஏன் வாடா போடா என பேசுகிறாய். 'ஹாரன்' அடிக்க மாட்டாயா' எனக் கேட்டுள்ளார்.அந்த நபர் ஆத்திரமடைந்து, பூவரசனை கையால் தாக்கியதுடன், வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இதையடுத்து, பூவரசன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்த புகாரின்படி, பூவரசனை தாக்கிய வானகரம் ராஜீவ்நகரில் உள்ள மாவு 'மில்'லில் பணிபுரியும் பள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த கோதண்டம், 29, என்பவரை போலீசார் கைது செய்தனர்.